கிணற்றில் மிதந்த சடலம் | அக்காவிற்கு எழுந்த சந்தேகம் | பகீர் கிளப்பிய அண்ணன் மகன்
2 ஏக்கர் நிலத்திற்காக சித்தப்பாவை கொலை செய்த அண்ணன் மகன்
சேலம் மாவட்டம் எடப்படிாயில் சொத்து வேண்டும் என்பதற்காக சொந்த சித்தப்பாவையே கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். திருமணமாகாத இவர், கடந்த 27ம் தேதி கள்ளுக்கடை அருகில் உள்ள விவசாய கிணற்றில் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இந்த விவகாரத்தில், அவரது அக்காவான, பொன்னுத்தாயி, தன் தம்பியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார், ராமசந்திரனின் அண்ணன் மகன் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ராமச்சந்திரனிற்கு 2 ஏக்கர் 40 செண்ட் நிலம் இருந்ததாகவும், அதனை கைப்பற்ற சித்தப்பாவை கம்பியால் அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பிரகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
