கடல் சீற்றத்தால் 3 மீனவர்களுடன் கவிழ்ந்த படகு | மீட்கப்படும் திக் திக் காட்சி

கடல் சீற்றம் - படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 3 மீனவர்கள் மீட்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தால் பைபர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து பைபர் படகில் அஞ்சப்பன் அவரது மகன் அஜித் மற்றும் செல்வராஜ் ஆகிய 3 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் கடும் சீற்றத்தால் படகு கடலில் கவிழ்ந்தது. இதைக் கண்ட கரையில் நின்ற சக மீனவர்கள் அலையில் போராடி 3 மீனவர்களையும் மீட்டு கரை சேர்த்தனர்... படகு கவிழ்ந்ததில் காயம் அடைந்த அஞ்சப்பன் அவரது மகன் அஜித் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com