"பொதுத்தேர்வும், சி.ஏ. தேர்வும் ஒரே நாளில் வருகிறது"; "எந்த தேர்வை எழுதுவது என்று தெரியவில்லை"
ஒரே தேதிகளில் வரும் பொதுத்தேர்வு மற்றும் சி.ஏ. தேர்வு
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், சி.ஏ. தேர்வும் ஒரே தேதிகளில் வருவதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மே 23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சி.ஏ மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக எந்த தேர்வில் பங்கேற்பது என்ற குழப்பம் மாணவர்களிடையே எழுந்துள்ளது. மேலும், பொதுத்தேர்வை அரசு விரைந்து முடிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
