நெல்லையில் சிதறிய ரத்தம்- தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகப்பைகளை சோதனையிட உத்தரவு

x

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் மாணவர் புத்தகப்பையில் அரிவாளை மறைத்து வைத்து கொண்டுவந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் புத்தகப்பையை சோதனை செய்ய முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்