ரத்தம் சொட்ட சொட்ட ஹாஸ்பிடல் வந்து டாக்டரை தகாத வார்த்தையில் திட்டி ரகளை..
அரசு மருத்துவமனையில் மதுபோதையில் ஒருவர் ரகளை
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அரசு மருத்துவமனைக்கு காயத்துடன் மதுபோதையில் வந்த ஒருவர், மருத்துவரை தகாத வார்த்தையால் பேசி ரகளையில் ஈடுபட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசு மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்த ஒருவர், தனது கை மற்றும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறி, அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அப்போது அவருக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மருத்துவம் பார்க்க முயன்றனர். எனினும் அவர்களை அந்த நபர் தகாத வார்த்தைகளில் பேசியதால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சமாதானம் செய்த நிலையில், அவசர வார்டில் இருந்து வெளியேறிய அந்த நபருக்கு பின்னர் முதலுதவி அளிக்கப்பட்டது.
Next Story
