திருவள்ளூரில் நேற்று வெடித்த கலவரம் -ரெடியாகும் லிஸ்ட்..அதிரடியாக இறங்கிய போலீஸ்
வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட நிறுவனங்களில் பணியாற்றும், வடமாநில நபர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஆவடி காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் வடமாநில ஊழியர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டத்தில், போலீசாருக்கும், வடமாநில நபர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டது. இந்நிலையில் வடமாநில நபர்கள், உரிய அடையாள அட்டையுடன் தான் தங்கி பணியாற்றி வருகின்றனாரா? உள்ளிட்ட விபரங்களை அனுப்புமாறு அந்தந்த நிறுவன உரிமையாளர்களுக்கு ஆவடி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
Next Story
