கள்ளக்குறிச்சியை சூழ்ந்த கரும்புகை - மளமளவென பற்றியெரிந்த தீ
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உயர் மின்னழுத்தம் காரணமாக பெட்டிக்கடை மற்றும் அதன் அருகில் இருந்த உணவகத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் 2 கடைகளிலும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின..மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
