பாஜகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார்
நடிகை ரஞ்சனா நாச்சியார், பா.ஜ.கவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய நிலையில், அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடைபெறுவதாக தெரிவித்துள்ளார். தேசியம், தெய்வீகம் குறுகிய வட்டத்தில் சுருங்கியதால் கட்சியை விட்டு வெளியேறுவதாகவும் மும்மொழிக் கொள்கை , திராவிட வெறுப்பை ஒரு தமிழச்சியாக ஏற்க முடியவில்லை எனவும் ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார். தன்னைப் பொறுத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும் எனவும் ரஞ்சனா நாச்சியார் கூறியுள்ளார்.
