

வேல் யாத்திரைக்காக திருத்தணி சென்ற பா.ஜ.க-வினர் அங்கு, முருகக் கடவுளை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த அவருக்கு அங்கு திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்த வாகனத்தில் நின்றபடி, தொண்டர்கள் மத்தியில் பேசிய முருகன், தமிழகத்தில் அடுத்த ஆட்சி பா.ஜ.க. கூட்டணி ஆட்சிதான் என்றார். வேல் யாத்திரை நடத்தினால் பிரச்சினை ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களின் கனவு பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.