காவல் நிலையம் முன்பு பாஜகவினர் உருண்டு போராட்டம்

பிரதமர் மோடியை கொச்சையாக விமர்சித்ததாக காங்கிரஸ் மீது, பாஜகவினர் அளித்த புகாரை ஏற்க போலீசார் மறுத்ததாக கூறி பாஜகவினர் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் சென்ற போது ராகுல் காந்தியின் வாகனம் மறிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, வடசென்னை காங்கிரஸ் கட்சியினர், சென்னை வண்ணாரப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பிரதமரை கொச்சையாக பேசியதாக அவர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், புகாரை ஏற்கவில்லை எனகூறி, காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் நிர்வாகி திரவியத்தை கைது செய்ய வேண்டும் என்று, பாஜகவினர் சாலையில் அமர்ந்து படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com