பேங்கில் புகுந்து உதவி மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி... திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் அருகே, தனியார் வங்கியில் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். மணவாள நகர் பகுதியில் தனியார் வங்கியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பாஜக மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த ஊழியர், ஏடிஎம் மெஷினை சர்வீஸ் செய்து கொண்டிருப்பதாகவும், தற்போது பணம் எடுக்க இயலாது எனவும் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்து, பாஜக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், வங்கி உதவி மேலாளரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபிலாஷை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com