பாஜக பிரமுகர் வெட்டி படுகொலை - பகீர் காரணம்.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி
திண்டுக்கலில் பாஜக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ராஜக்காபட்டியை சேர்ந்த சுப்பிரமணி மகன்களான விஜயகுமார், கணேஷ்குமார் இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதில் விஜயகுமாருக்கு ஆதரவாக அவரது நண்பர் பாலகிருஷ்ணன்,சொத்தை பிரித்து தருமாறு கணேஷ்குமாரிடம் கூறிவந்துள்ளார். இந்த விவகாரத்தில் பால கிருஷ்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், கணேஷ்குமார் உட்பட இருவரை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர். மேலும் இருவர் தாமாக நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், இன்னும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்
Next Story