ஈபிஎஸ்ஐ காண வந்து விபத்தில் சிக்கிய பாஜக நிர்வாகி - ஆற்காடு அருகே பரபரப்பு
ஈ.பி.எஸ்.ஐ காணவந்த பாஜக மாவட்ட தலைவரின் கார் விபத்தில் சிக்கியதில் அவர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஈ.பி.எஸ் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்று பயணம் மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக ராணிப்பேட்டை மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன், தனது கட்சியினர்களுடன் காரில் வந்த நிலையில், எதிரே வந்த ஸ்கூட்டி மீது மோதாமல் இருக்க காரை நிறுத்திய போது பின்னால் கேஸ் ஏற்றி வந்த கனரக லாரி மோதியதில் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆனந்தன் மற்றும் அவருடன் வந்த இருவர் என 3 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
