குழந்தைகள் ஆசையாக வாங்கி சாப்பிடும் பிஸ்கட்டில் நெளிந்த புழு-அதிர்ச்சி வீடியோவை கண்டு அதிரடி ரெய்டு
வேஃபர் wafer பிஸ்கட்டில் புழு இருந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கடை மற்றும் தனியார் ஏஜென்சி குடோனில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே ராஜா என்பவர் குழந்தைகளுக்காக வாங்கிய வேஃபர் wafer பிஸ்கட்டில் புழுக்கள் இருந்தது. இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட கடையில் சோதனையிட்ட அதிகாரிகள், பிஸ்கட் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடைக்கு விற்பனை செய்த தனியார் ஏஜென்சி குடோனிலும் சோதனை நடத்திய அதிகாரிகள், இதுகுறித்து நபாட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கும் தகவல் அளித்தனர்.
Next Story
