Gold Jewellery |யதேச்சையான சோதனையில் நகைக்கடையின் தில்லுமுல்லு அம்பலம்.. தங்க நகை வாங்குவோரே உஷார்..

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள நகைக்கடையில் இந்தியத் தர நிர்ணய அமைவன அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். இதில் அரசு விதிமுறையை மீறி ஹால்மார்க் (HUD) முத்திரை வைக்கப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்ட சுமார் 75 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com