குறையும் பறவைகளின் எண்ணிக்கை.. என்ன காரணம்? ஆய்வில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் | Kovai

x

கோவையில் குறைந்த பறவைகளின் எண்ணிக்கை

கோவையில் பறவைகள் எண்ணிக்கை, வகைகள் குறித்து கணக்கெடுப்பு

வெட்லாண்ட்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு மூலம் நடைபெற்ற கணக்கெடுப்பு பணி

31 குளங்களில் கணக்கெடுப்பு - 149 வகையான பறவைகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன

கடந்தாண்டைவிட பறவைகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாக தகவல்

குளங்களுக்குள் கழிவுநீர் கலப்பது, மரங்கள் வெட்டப்பட்டதே முக்கிய காரணம்

அதிகம் தென்பட்ட தகைவிலான், பொரி உள்ளான் மற்றும் நீலவால் பஞ்சுருட்டான் பறவைகள்

நீலத் தலை தகைவிலான், துரியன் நாகணவாய் ஆகிய பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளத

வயல் கதிர்க்குருவி, சின்ன தோல் குருவி ஆகிய பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான எண்ணிக்கை. 2024-ம் ஆண்டு 16,069 பறவைகள் இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 9119 ஆக குறைந்துள்ளது.

இது குளங்களுக்குள் கழிவுநீர் கலப்பது முக்கிய காரணமாக உள்ளது, குளக்கரைகளில் இருந்த தாவரங்கள் மற்றும் குளங்களுக்குள் இருந்த மரங்கள் அகற்றப்பட்டதும் முக்கிய காரணமாக உள்ளது. தென்கிழக்கு பருவமழை பொதுவாக இருந்தபோதிலும், பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது

தகைவிலான், பொரி உள்ளான் மற்றும் நீலவால் பஞ்சுருட்டான் ஆகிய வலசை வரும் பறவைகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன.

மடையான், உண்ணி கொக்கு மற்றும் காக்கை ஆகிய உள்ளூர் பறவைகள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன.

நீலத் தலை தகைவிலான், துரியன் நாகணவாய், வயல் கதிர்க்குருவி மற்றும் சின்ன தோல் குருவி ஆகிய பறவைகள் குறைந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்