விமான நிலைய ஓடுபாதையில் லாப்விங் பறவை...முட்டையிட்டு அடைகாக்கும் வீடியோ

விமான நிலைய ஓடுபாதையில் லாப்விங் பறவை...முட்டையிட்டு அடைகாக்கும் வீடியோ
Published on

சென்னை விமான நிலைய ஊழியர் ஒருவர், ஓடுபாதையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, வித்தியாசமான பறவை ஒன்று, ஊழியரை பார்த்ததும் பறந்து சென்றது. பறவை இருந்த இடத்தில் இரண்டு முட்டைகளும் இருந்தது. அந்த இடத்தில், தனது செல்போன் கேமராவை வைத்துவிட்டு, அந்த ஊழியர் நகர்ந்து சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் வந்த, அந்த பறவை, முட்டையின் மீது அமர்ந்து, அடைகாத்தது. விமான நிலைய ஊழியர், இந்த வீடியோவை மற்றவர்களிடம் பகிர்ந்ததில், அந்த பறவை, லாப்விங் பறவை என்பது தெரியவந்தது. விமானங்களின் பயங்கர சத்தங்களுக்கு இடையேயும், பறவை ஒன்று தனது முட்டைகளை அடைகாத்து வருவது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com