ஈரோட்டில் 10ம் தேதி பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர்ஸ் பிரீமியர் லீக்
10 அணிகள் பங்கேற்கும் இரண்டாவது பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்ஸ் பிரீமியர் லீக் தொடர், வரும் பத்தாம் தேதி ஈரோட்டில் தொடங்குகிறது.
ஈரோடு மாவட்ட பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்ஸ் சங்கம் இப்போட்டியை நடத்துகிறது. இது குறித்து சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் விடுதியில், சர்வதேச பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர்ஸ் நடுவர் ஆர்.பி.கணேஷ் மற்றும் இந்திய வீராங்கனை முன்னாள் ஆசிய சாம்பியன் அனுபமா ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 14ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் சென்னை, கோவை உட்பட மொத்தம் பத்து அணிகளும், 90 வீரர் வீராங்கனைகளும் கலந்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்தனர். முதலிடம் பிடிக்கும் அணிக்கு 4 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், அரை இறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளதாக கூறினர்.
