Bikerace || பைக் ரேஸ் - சென்னை மாநகர காவல்துறை தீவிர கண்காணிப்பு
சென்னையில் பைக் ரேஸ் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களை தடுக்கும் வகையில் சென்னை காவல் துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் தொடர்ந்து இருசக்கர வாகன ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபடக்கூடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னை போலீசார் இளைஞர்களை கண்டறிந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அதனை மீறியும் ஒரு சில இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள ஐடிகளில் பதிவிடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக பைக் சாகசம் செய்து வீடியோவாக பதிவிடும் இளைஞர்களின் ஐடிக்களை கண்காணித்து முடக்கும் நடவடிக்கையை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. மேலும், தொடர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
