ரயில் நிலைய வாசலில் திடீரென தீப்பிடித்து எரிந்த இ-பைக்.. பதறியடித்து ஓடிய பயணிகள்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் ரயில் நிலைய வாசலில் நிறுத்தி வைத்திருந்த பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முகமது சித்திக் என்பவர் தனது மகனை அழைத்துச் செல்ல வந்திருந்த போது, ரயில் நிலைய வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது இ-பைக் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் பதறி அடித்து ஓடினர். அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு ஸ்கூட்டரும் தீப்பிடித்து எரிந்தது.
Next Story
