குன்றத்தூர் : வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தண்டலத்தை சேர்ந்த விஜய் தனது 3 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
குன்றத்தூர் : வேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - 2 பேர் பலி
Published on
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த தண்டலத்தை சேர்ந்த விஜய் தனது 3 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை திருமுடிவாக்கம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தின் முன்புறம் அமர்ந்திருந்த நிவேதா என்ற சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜய் படுகாயமடைந்த நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com