Chennai | TN Police | சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பைக் திருட்டு - பொதுமக்கள் வேதனை

சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பைக் திருட்டு - பொதுமக்கள் வேதனை

சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் பைக் திருட்டு - பொதுமக்கள் வேதனை

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஹெல்மெட் அணிந்தபடி வீடுகளுக்குள் நுழைந்து, இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சி.டி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் குறிவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைந்து கைது செய்து, தொடர் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாம்பரம் காவல்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com