Bike Taxi | Rapido | பெண்ணிடம் அசிங்கம் செய்த Rapido ஓட்டுநர்- மாவுக்கட்டுடன் தூக்கி வந்த போலீசார்
சென்னை திருவான்மியூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 5 ஆம் தேதி இரவு சாலையில் நடந்த சென்ற 26 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடிய நபரை, சிசிடிவி காட்சிகள் மற்றும் ராபிடோ நிறுவனத்தின் உதவியுடன் போலீசார் அடையாளம் கண்டனர். அதன்படி சம்பவத்தன்று ராபிடோ பைக் டாக்ஸி ஓட்டிய வெட்டுவாங்கேணி கற்பக விநாயகர் நகரை சேர்ந்த திருமலை என்பவரை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற திருமலைக்கு தவறி விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
Next Story
