பைக் பறிமுதல் – ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

x

சென்னையில் ஆவணங்களின்றி இயக்கிய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்ததால், இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் ஜானகி நகரைச் சேர்ந்த ஏஞ்சல் கெல்சியா தனது இருச்சக்கர வாகனத்தில் ஆவடிக்கு சென்றுள்ளார். அப்போது வழியில் போக்குவரத்து போலீசார் முறையான ஆவணங்கள் இன்றி வாகனத்தை இயக்கியதால் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஏஞ்சல் வீட்டிற்கு சென்று பாத்ரூப் கழுவும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து ஏஞ்சலின் சகோதரர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார். சம்பவம் தொடர்பாக மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்