Bike | Insurance | "திருடு போன பைக்கிற்கு இன்சூரன்ஸ் கட்டச் சொல்லி மெசேஜ்.." - புலம்பும் பிரபலம்

Bike | Insurance | "திருடு போன பைக்கிற்கு இன்சூரன்ஸ் கட்டச் சொல்லி மெசேஜ்.." - புலம்பும் பிரபலம்
Summary

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, தான் ஆசையா வாங்கித் திருடு போன பைக் பத்தி போட்டிருக்கிற இன்ஸ்டாகிராம் பதிவு இப்போ சோஷியல் மீடியால செம வைரலாகிட்டு வருது... மணிமேகலை - ஹுசைன் ஜோடியோட பைக் கடந்த 2022ல திருடு போச்சு... இது சம்பந்தமா அவங்க போலீஸ்ல புகாரும் குடுத்திருந்தாங்க... இந்த நிலையில, மணிமேகலையோட போனுக்கு அந்தப் பைக்கோட இன்சூரன்ஸ் முடியப்போகுதுன்னு ஒரு மெசேஜ் வந்திருக்கு... இதைப் பார்த்த மணிமேகலை, "திருட்டுப்போன என் பைக்குக்கு இன்சூரன்ஸ் எக்ஸ்பைரி மெசேஜ் வருது... இன்சூரன்ஸ் கூட கட்டாம எங்கேயோ வண்டிய ஓட்டிட்டு இருக்காங்க" அப்படின்னு அவங்களுக்கே உரிய பாணியில கலாய்த்துப் பதிவு போட்டிருக்காங்க.... வண்டியப் பத்தி எந்தத் தகவலும் இல்லனாலும், வந்த மெசேஜை வைச்சு மணிமேகலை செஞ்ச இந்த நக்கல் கமெண்ட் இப்போ நெட்டிசன்களையும் சிரிக்க வைச்சிருக்கு...

X

Thanthi TV
www.thanthitv.com