பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ...

பெட்ரோல் நிலையம் அருகே தீ விபத்தால் பரபரப்பு.
பெட்ரோல் நிரப்பிய இருசக்கர வாகனத்தில் பற்றிய தீ...
Published on
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெட்ரோல் நிரப்பிய சில நிமிடங்களில் இருசக்கர வாகனத்தில் தீ பற்றியது. ரெத்தினகோட்டை சேர்ந்த முகமது மன்சூர் அவரது தாயாருடன் பெட்ரோல் நிலையத்தில் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டாங்க் பகுதியில் தீ பற்றியது. உடனே இருவரும் தப்பித்துவிட, அக்கம்பக்கத்தினர் தீயை அனைக்க முயன்றனர். தகவலறிந்த சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை முழுமையாக அனைத்தனர். பெட்ரோல் நிலையம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.
X

Thanthi TV
www.thanthitv.com