#JUSTIN | நள்ளிரவில் பைக்கை முறுக்கி திரியும் இளைஞர்கள்.. சென்னையில் தொடரும் Bike Race சேட்டை

சென்னையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ், சாகசங்களில் ஈடுபட்டு வருவோரை கண்காணிக்க சென்னை முழுவதும் காவல்துறையினர் ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் போலீசார் கண்காணிப்பையும் மீறி இளைஞர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர், கோடம்பாக்கம் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் வாகன சாகசத்தில் ஈடுபட்டதாக நேற்று 45 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com