Bihar Family Murder | பீகார் குடும்ப கொலை - கொடூரன்களை பார்த்ததும் கோர்ட் காட்டிய அதிரடி

x

சென்னையில் பீகார் தம்பதி கொலை வழக்கில் கைதான மூவருக்கு பிப்.12ம் தேதி வரை சிறை

சென்னை அடையாறில், 2 வயது குழந்தை மற்றும் பீகார் தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான மூன்று பேரை பிப்ரவரி 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே பீகார் இளைஞர் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் தூக்கி வீசிய சம்பவத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முதலில் கைது செய்யப்பட்ட சிக்கந்தர், லலித், விகாஷ் குமார் ஆகிய மூவரை போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த மூவரையும் பிப்ரவரி 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இளைஞர் மற்றும் குழந்தையின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அவரது மனைவியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்