பிகில் பட வரி ஏய்ப்பு புகார் விவகாரம் : தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
பிகில் பட வரி ஏய்ப்பு புகார் விவகாரம் : தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜர்
Published on

பிகில் பட வரி ஏய்ப்பு புகார் தொடர்பான வருமான வரி சோதனையில் 77 கோடி பணம், கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து ஏற்கனவே, நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் தரப்பு ஆடிட்டர்கள் விளக்கம் அளித்தனர். தங்கள் தரப்பு விளக்கங்களை பிரமாண பத்திரமாக அவர்கள் அளித்துள்ளனர். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து அர்ச்சனா கல்பாத்தி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com