இசைவாணியின் சாதி சொல்லி அவதூறு பரப்பியவர்களுக்கு நேர்ந்த கதி

x

பாடகி இசைவாணி கொடுத்த புகாரில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

இசைவாணி பற்றியும், அவரது சாதி பற்றியும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி மிரட்டிய விவகாரத்தில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த பிரகஸ்பதி, பொழிச்சலூரை சேர்ந்த சுரேஷ்குமார், திருவண்ணாமலையை சேர்ந்த ரவிசந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், அவர்கள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்