

பவானிசாகர் அணையில் தொடர்ந்து 115 நாட்கள், 100 அடி அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டு இருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் சரியாமல் பராமரிக்கப்பட்டு
வந்ததாகவும், நீண்ட நாட்கள் அணையின் நீர்மட்டம் 100 அடி அளவில் இருந்தது இதுவே முதல் முறை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானியில் 3 ஆயிரத்து 300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் வரும் நாட்களில் நீர்இருப்பு குறைய வாய்ப்புள்ளது.