Gpay-யில் பணம் அனுப்புபவர்களே உஷார் - ரூ.10 ஆயிரத்தை மீட்க ரூ.1 லட்சத்தை இழந்த அப்பாவி

x

கிருஷ்ணகிரியில், ஜீபே மூலம் இழந்த 10 ஆயிரம் ரூபாயை மீட்க விவசாயி ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பி. முதுகானப்பள்ளியை சேர்ந்த விவசாயி திம்மராயப்பா, கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாஸ் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளார். இதனையடுத்து, அந்த பணத்தை ஜீபே மூலம் அவருக்கு அனுப்புவதற்குப் பதிலாக வேறொரு சீனிவாஸ் என்பவருக்கு திம்மராயப்பா அனுப்பியுள்ளார்.இந்நிலையில், போலீஸ் என்று கூறி, பணத்தை மீட்டுத் தருவதாக வந்த நபர், ஜீபே மூலம் ஒரு லட்சம் ரூபாய் பெற்று கொண்டு தலைமறைவாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்