Bestie | Bike Ride | ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற இளம்பெண் தலை சிதறி மரணம்
சென்டர் மீடியனில் இருசக்கர வாகனம் மோதி மாணவி உயிரிழப்பு
சென்னை பெரம்பூரில், ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி, சென்டர் மீடியனில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்த கல்லூரி மாணவர் அசோக், சமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான அயனாவரத்தை சேர்ந்த16 வயது மாணவியுடன் இருசக்கர வாகனத்தில் முரசொலி மாறன் பாலம் வழியாக சென்றார். பாலத்தின் கீழே இறங்கும்போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்த காயமடைந்த மாணவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அசோக், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து புளியந்தோப்பு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
