குன்னுார் குடியிருப்பு வளாகத்தில் புகும் கரடிகள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் குடியிருப்பு வளாகத்தில் கரடிகள் புகுந்து தேனை உட்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது
குன்னுார் குடியிருப்பு வளாகத்தில் புகும் கரடிகள்
Published on

நீலகிரி மாவட்டம், குன்னூர் குடியிருப்பு வளாகத்தில் கரடிகள் புகுந்து தேனை உட்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அட்டடி கிராமத்தில் குடியிருக்கும் மணி என்பவர், வீட்டில் தேன் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். மேலும், பழங்கள் அதிகமாக உள்ளதால், அவ்வப்போது கரடிகள் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து தேனீக்களை முழுமையாக உட்கொண்டு செல்வதுடன் சேதப்படுத்தியும் வருகிறது. இதனால் விற்பனைக்கு தயாராக இருந்த தேனீக்களை சேதப்படுத்தியதால், அரசு தமக்கு நிவாரணம் வழங்குவதுடன் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com