நாயை தாக்கி கொன்ற கரடி - அதிர்ச்சி வீடியோ.. உயிர் பயத்தில் மக்கள்
உதகை அருகே குடியிருப்பு பகுதியில் கரடி தாக்கி, நாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள சோலூர் கக்கன்ஜி நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி, அங்கிருந்த நாய் ஒன்றை அடித்துக் கொன்றது. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர், டார்ச் லைட் அடித்து பார்த்தபோது, கரடி வேக வேகமாக தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Next Story
