Courtallam | குற்றால அருவியில் குளிக்கும் போது உஷார்... கூட்டத்தோடு கூட்டமாக அதிர்ச்சி செயல்

x

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவியில் குளித்து கொண்டிருந்த ஆண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். சீசனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குற்றால அருவிகளில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் குளித்துக் கொண்டிருந்த பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டர்கள் அளித்த புகாரின் பேரில் மதுரை மற்றும் சிவகாசியை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்