"மன்னித்து விடுங்கள்" - நீதிபதி முன் பவேரியா கொள்ளையர்கள் கண்ணீர் கோரிக்கை

தெரியாமல் 120 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டதாகவும், தங்களை மன்னித்துவிட வேண்டும் என்றும் நீதிபதி முன் பவேரியா கொள்ளையர்கள் கதறி அழுதனர்...
"மன்னித்து விடுங்கள்" - நீதிபதி முன் பவேரியா கொள்ளையர்கள் கண்ணீர் கோரிக்கை
Published on

சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் ரமேஷ் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை போன வழக்கில் வடமாநிலங்களை சேர்ந்த பவேரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி மூலம் துப்பு துலக்கிய போலீசார், கொள்ளையர்கள் ஜெய்ப்பூர் செல்வதை அறிந்து மத்திய பிரதேச போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தயாராக இருந்த மத்திய பிரதேச போலீசார் உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் அவர்களை கைது செய்த நிலையில், சென்னையில் இருந்து உதவி ஆணையர் சங்கர நாராயண‌ன் தலைமையில் சென்ற தனிப்படை போலீசார், அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த ராஜீ கோரு, பால்சந்த், ராம் நிவாஸ் உள்ளிட்ட 7 பேர் ஆலந்தூர் மாஜிஸ்திரேட் ஸ்டெர்லி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது தாங்கள் தெரியாமல் தவறு இழைத்துவிட்டதாகவும், மன்னித்துவிடுங்கள் என்றும் அவர்கள் மாஜிஸ்திரேட் முன் கதறி அழுதுள்ளனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் 6 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறுவன் ஒருவன் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான்.

X

Thanthi TV
www.thanthitv.com