உணவு தர மறுத்த பார் ஊழியர் கழுத்து நெறித்து கொலை...

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உணவு தர மறுத்த பார் ஊழியரை அசாம் மாநில இளைஞர் ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உணவு தர மறுத்த பார் ஊழியர் கழுத்து நெறித்து கொலை...
Published on
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வள்ளியப்பன் என்பவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள டாஸ்மாக் பாரில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இருவருடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீர் உசேன் என்ற இளைஞரும் வேலை செய்து வந்துள்ளார். வள்ளியப்பனிடம் அமீர் உணவு கேட்டதாக கூறப்படுகிறது . அதற்கு வள்ளியப்பன் பாரில் உணவு தரும் வழக்கம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமீர் உசேன், போதையில் வள்ளியப்பன் உறங்கியபோது, நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய அமீர் உசேனை தேடி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com