பார் ஓனருக்கு வெட்டு.. கொடுத்த வாக்கை நிறைவேற்றாத போலீஸ் - உறவினர்கள் முடிவால் அதிர்ச்சி

x

பார் உரிமையாளருக்கு வெட்டு - உறவினர்கள் முற்றுகை

ராமநாதபுரத்தில் பார் உரிமையாளரை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்னே உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சம்பவம் நடந்தே அன்றே குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்த நிலையில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர் நிர்மல் குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்