

இளம்பெண் சுபஸ்ரீ வழக்கில், மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டி உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி, 'இளைய தலைமுறை' என்ற அமைப்பினர் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியது.