ஆவணங்களை திருப்பி தர லஞ்சம் - வங்கி மேலாளரை பொறி வைத்து பிடித்த சிபிஐ

கடனுக்கு பிணையாக கொடுத்த சொத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
ஆவணங்களை திருப்பி தர லஞ்சம் - வங்கி மேலாளரை பொறி வைத்து பிடித்த சிபிஐ
Published on

சென்னை கீழ்ப்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் தனது சொத்து ஆவணங்களை பிணையாக வைத்து கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பின்னரும், வங்கியின் மேலாளர் ரவீந்திரன் சாமுவேல் பிணையமாக கொடுத்த சொத்து ஆவணங்களை திரும்ப தர 15 ஆயிரத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது. இது குறித்து சிபிஐக்கு புகார் அளித்த வாடிக்கையாளர், அவர்கள் அறிவுரைப்படி, ரசாயணம் தடவிய பணத்தை வங்கி மேலாளரிடம் வழங்கியுளார். அப்போது சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக வங்கி மேலாளர் ரவீந்திரன் சாமுவேலை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com