Bank News | "வங்கி காசோலையை ஒரே நாளில் பணமாக மாற்றும் நடைமுறை அமல்"
வங்கிகளில் செலுத்தப்படும் காசோலைகளை ஒரே நாளில் பணமாக மாற்றும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இந்த புதிய நடைமுறையை அக்டோபர் 4-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி கூறியிருந்த நிலையில், தங்களது வங்கிகளில் அமல்படுத்துவதாக HDFC, ICICI உள்ளிட்ட தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. வாடிக்கையாளர்களை போதிய அளவில் வங்கிக் கணக்கில் பணம் இருப்பு வைத்திருக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகள் அறிவுறுத்தி இருந்தன. புதிய நடைமுறையின்படி, ஒரு வங்கியில் செலுத்தப்படும் காசோலை, அங்கிருந்து ஸ்கேன் செய்யப்பட்டு, காசோலை கொடுத்த வங்கிக் கிளைக்கு அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட வங்கி, மாலை 7 மணிக்குள் பதில் அளிக்கவில்லை எனில், காசோலை அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்பட்டு, வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
Next Story
