வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர்களை தட்டி தூக்கிய போலீஸ்
சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரிவாள், உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சித்தலூர் விலக்கு பகுதியில் உள்ள மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சோதனையிட்ட போலீசார் அங்கு பதுங்கியிருந்த வேல்முருகன், ராமையாராஜன், உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சிவகங்கையில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் 5 பேரையும் கைது செய்தனர்.
Next Story
