பங்காரு அடிகளார் ஜீவசமாதி - ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் உள்ள பங்காரு அடிகளார் ஜீவசமாதியில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வழிபாடு நடத்தி, மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி, கோயில் கருவறை அருகே, பங்காரு அம்மா குரு மண்டபத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜீவசமாதியில், எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தி வழிபட்டார். இதனைத்தொடர்ந்து, கோயில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com