சத்திய ஞான சபையை புனித இடமாக அறிவிக்க பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கோரிக்கை

x

வடலூர் சத்திய ஞான சபையை புண்ணிய பூமியாக அறிவிக்க வேண்டும் என பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வள்ளலார் நிறுவிய தர்மசாலையின் அணையா அடுப்பின் 159வது தொடக்க விழா நடைபெற்று வருகிறது. பெங்களூரு திருவள்ளுவர் சங்கம், தாய்மொழிக் கூட்டமைப்பு சார்பில் ஏராளமான தொண்டர்கள் வடலூர் வந்துள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு திருவள்ளுவர் சங்கத்தின் தலைவர் குமார், வடலூரை புனித நகரமாக அறிவிக்கவில்லை என்றாலும் சத்திய ஞான சபையை மட்டும் புண்ணிய பூமியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர் கூறினார். வள்ளலார் வாழ்ந்த கருங்குழி, மேட்டுக்குப்பம், மருதூர் பகுதிகளை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்