வாழ்வாதாரத்தை இழக்கும் வாழை விவசாயிகள்?.. "இதுக்கு தடை விதிச்சா நல்லா இருக்கும்"
தஞ்சை அய்யம்பேட்டை அருகே மேலஉத்தமல்லூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் வாழை இலை மலிவான நிலைக்கு விற்பனையாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்... தமிழ்நாடு முழுவதும் பாதி மாவட்டங்களுக்கு இங்கிருந்து வாழை இலைகளை ஏற்றுமதி செய்து வருவதாகவும் கஷ்டப்பட்டு இரவு பகல் பாராமல் விவசாயம் செய்தும் கூட குறைந்த விலைக்கே விற்பனை ஆவதாகவும் அவர்கள் கவலையடைந்தனர்... இந்நிலையில் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
