Banana | சென்னை NH நடுரோட்டில் அம்பாரம் அம்பாரமாக கிடக்கும் வாழைத்தார்கள்
சென்னை NH நடுரோட்டில் அம்பாரம் அம்பாரமாக கிடக்கும் வாழைத்தார்கள்
#chennaitrichynh #banana
உளுந்தூர்பேட்டை அருகே வாழைப்பழம் ஏற்றி சென்ற லாரி நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு லாரி உளுந்தூர்பேட்டை அருகே சென்றபோது திடீரென டயர் வெடித்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த வாழைத்தார்கள் சாலையில் கொட்டி சிதறி சேதமடைந்தன. ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த எலவனாசூர்கோட்டை போலீசார், சாலையில் கிடந்த வாழைத்தார்களையும் லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
