`இஸ்ரேல் திரைப்பட விழாவிற்கு தடை விதிக்கவும்'' - ஜவாஹிருல்லா கோரிக்கை
பாலஸ்தீனத்தின் மீதான காசாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சென்னை இசைக்கல்லூரியில் நடக்க உள்ள இஸ்ரேல் திரைப்பட விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனம் மீதான காசாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜவஹிருல்லா, முதல்வரின் டெல்லி பயணம் குறித்த எதிர்க்கட்சிகளின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்பதற்காகவே, முதல்வர் டெல்லி சென்றதாகவும், எதிர்க்கட்சிகளுக்கு முதல்வரை விமர்சிக்க அருகதை இல்லை என அவர் பதிலளித்தார்.
Next Story
