பால சாகித்ய புரஸ்கார் விருது - விஷ்ணுபுரம் சரவணன், லட்சுமிஹருக்கு முதல்வர் வாழ்த்து

x

2025ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது, தமிழ் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 24 மொழிகளின் சிறந்த படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும், ‘கூத்தொன்று கூடிற்று' என்ற சிறுகதை தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருது லட்சுமிஹருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்