கெட்டுப்போன கேக்கை கொடுத்த பேக்கரி.. வாக்குவாதம்.. வைரல் வீடியோ
கெட்டுபோன கேக்கை சாப்பிட்ட சிறுவனுக்கு வாந்தி
காரைக்குடியில், கெட்டுப்போன கேக்கை சாப்பிட்ட சிறுவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சம்பந்தபட்ட பேக்கிரியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோட்டையூரை சேர்ந்த பூமிநாதன் என்பவர், பர்மா காலனி பகுதியில் உள்ள பிரபல பேக்கிரியில், வாங்கி சென்ற கேக்குகளை அவரது மகன் சாப்பிட்டுள்ளார். இதனால் சிறுவன் வாந்தி எடுத்த நிலையில், பேக்கிரிக்கு சென்று பூமிநாதன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து பேக்கிரியில் சோதனை செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கேக் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
Next Story
